MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    4.2 முருக நாயனார் புராணம் (1022 -1035)


    திருச்சிற்றம்பலம்

    1022 தாது சூழும் குழல் மலையாள் தளிக்கை சூழும் திருமேனி
    மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி
    சோதி சூழும் மணி மௌலிச் சோழர் பொன்னி திரு நாட்டுப்
    போது சூழும் தடஞ்சோலைப் பொய்கை சூழும் பூம் புகலூர் 4.2.1
    1023 நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் மனம் போல் அரவு அணிந்த
    சேம நிலவு திரு நீற்றின் சிறந்த வெண்மைத் திருந்தொளியால்
    யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல்
    காமர் மதுவுண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்குமால் 4.2.2
    1024 நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கலைய
    வண்ண மதுரத் தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல
    தண்ணென் சோலை எம் மருங்கும் சாரும் மடமென் சாரிகையின்
    பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந் தேன் பொழியுமால் 4.2.3
    1025 வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன
    கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல
    அண்டர் பெருமான் திருப் பாட்டின் அமுதம் பெருகச் செவி மடுக்கும்
    தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்புமால் 4.2.4
    1026 ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண் புகலூர் அது தன்னில்
    மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை முதல்வர்
    ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடிக் கீழ்
    ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார் 4.2.5
    1027 அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங் கமல வயல் கயல்கள்
    மடை மேல் உகளும் திருப்புகலூர் மன்னி வாழுந் தன்மையராய்
    விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றைச்
    சடை மேல் அணியத் திருப் பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவார் 4.2.6
    1028 புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கிப் போய்
    மலரும் செவ்வித் தம் பெருமான் முடிமேல் வான் நீர் ஆறுமதி
    உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த
    அலகில் மலர்கள் வெவ் வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார் 4.2.7
    1029 கோட்டு மலரும் நில மலரும் நீர் மலரும் கொழுங் கொடியின்
    தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலருந் திருவாயில்
    காட்டு முறுவல் நிலவு அலரக் கனக வரையிற் பன்னக நாண்
    பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையலாகும் மலர் தெரிந்து 4.2.8
    1030 கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும்
    இண்டைச் சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும்
    தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும்
    நுண்டாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூன்மார்பர் 4.2.9
    1031 ஆங்கப் பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்துத்
    தாங்கிக் கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்
    பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிகப் பற்றான
    ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும் ஓவா நாவின் உணர்வினார் 4.2.10
    1032 தள்ளும் முறைமை ஒழிந்திட இத் தகுதி ஒழுகும் மறையவர் தாம்
    தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம் பொன் வள்ளத்தில்
    அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலைப்பால் உடன் உண்ட
    பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் 4.2.11
    1033 அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல்
    மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான வீச்சுரத்து
    நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே
    பன்னும் பெருமை அஞ்செழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் 4.2.12
    1034 அங்கண் அமருந் திருமுருகர் அழகார் புகலிப் பிள்ளையார்
    பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கருளிச்
    செங்கண் அடலேறு உடையவர் தாஞ்சிறந்த அருளின் பொருள் அளிக்கத்
    தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் 4.2.13
    1035 அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ்
    விரவு புகலூர் முருகனார் மெய்மைத் தொண்டின் திறம் போற்றிக்
    கரவில் அவர் பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு
    பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன் 4.2.14

    திருச்சிற்றம்பலம்


Goto Main book