MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    5.2 குலச்சிறை நாயனார் புராணம் (1700 - 1710)


    திருச்சிற்றம்பலம்

    1700 பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச்
    செந்நெலார் வயல் தீம் கரும்பின் அயல்
    துன்னு பூகப் புறம் பணை சூழ்ந்தது
    மன்னு வண்மையினார் மண மேற்குடி 5.2.1
    1701 அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம்
    ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய
    செப்பரும் சீர்க் குலச் சிறையார் திண்மை
    வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் 5.2.2
    1702 காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே
    வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை
    யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து
    ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் 5.2.3
    1703 குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
    நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
    அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில்
    செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார் 5.2.4
    1704 உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
    அலகில் தீமையர் ஆயினும் அம்புலி
    இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில்
    தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையார் 5.2.5
    1705 பண்பு மிக்கார் பலராய் அணையினும்
    உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
    எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு
    நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் 5.2.6
    1706 பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து
    ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை
    ஓது நா வணக்கத்தால் உரைப்பவர்
    பாதம் நாளும் பரவிய பண்பினார் 5.2.7
    1707 இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த்
    தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ்
    மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார்
    ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார் 5.2.8
    1708 ஆய செய்கையர் ஆயவர் ஆறணி
    நாயனார் திருப் பாதம் நவின்று உளார்
    பாய சீர் புனை பாண்டி மா தேவியார்
    மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார் 5.2.9
    1709 புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும்
    தென்னர் நாடு திருநீறு போற்றவும்
    மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி
    சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் 5.2.10
    1710 வாதில் தோற்ற அமணரை வன் கழுத்
    தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்
    யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன்
    வேத நீதி மிழலைக் குறும்பர் தாள் 5.2.11

    திருச்சிற்றம்பலம்


Goto Main book